ஏப்ரல் 23ஆம் தேதி யாருக்கெல்லாம் விடுமுறை..?
நம் தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் உள்ள பிரிவு 135பி வாக்குப்பதிவு நாளில் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்த விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. எனவே, வாக்காளர்கள் ஓட்டு அளிக்க அந்தந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிப்பது கட்டாயமாகும். ஆனால், ஒருசில தனியார் நிறுவனங்களில் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்கப்படுவது கிடையாது. எனவே, உங்கள் நிறுவனத்தில் வாக்களிக்க விடுமுறை அளிக்கவில்லை என்ற நீங்கள் புகார் அளிக்கலாம் தொழில்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாவட்ட அளவில் கட்டுப்பாடு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் வாக்களிக்கும் நாள் என்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் 0422 2241136, 82206 13777, 95008 97708, 98433 71977 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். சென்னையில் 1800 425 7012 என்ற கட்டணமில்லை எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதியில் 89258 15411 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம். கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதியில் 89258 15415 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும், ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு 89258 15417, சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு தொகுதியில் 89258 15421, சைதாப்ட்டை, தி.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் 89258 15423, மயிலாப்பூர், வேளச்சேரிக்கு 89258 15425 எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.
தேர்தல் நாளில் வாக்களிக்க தகுதியான அனைவருக்கும் நிறுவனங்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வாக்களிக்க விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டது.
விடுமுறை காரமணாக, பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது எனவும் அன்றாட நாளுக்கான சம்பளத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை வாக்குப்பதிவு நாள் அன்று விடுமுறை அளிக்க நிறுவனங்கள் மறுத்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசு மாவட்ட அளவில் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொள்ளும். மேலும், வாக்குப்பதிவு நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்தும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



