10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பெருமாளின் அவதாரம் எனக் கூறிவரும் மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகாவிஷ்ணு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் பரம்பொருள் வாழ்வியல் வகுப்பு என்ற பெயரில் ஆசிரமம் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு சித்த மருத்துவம் படித்து இருப்பதாக கூறி காயகல்ப லேகியம் விற்பனையும் செய்து இருக்கிறார் மகா விஷ்ணு. மகாவிஷ்ணு தயாரித்துள்ள "நான் செய்த குறும்பு" என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளி வருகிறது. தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக மகா விஷ்ணு கூறிவருகிறார்.