தாராபுரம், மதுராந்தகத்தை கைப்பற்றப்போவது யார்? இன்று வாக்குப்பதிவு..!

 
1

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இத்தேர்தலில் ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனிடையே பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,11,295 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,03,943 பேர். பெண்கள் 1,07,288 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 64 பேர்.

தாராபுரம் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,22,875 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,06,875 பேர். பெண்கள் 1,15,523 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர்.

7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

இந்த இரு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும். இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படை மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.