முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் - யார் விண்ணப்பிக்கலாம்?

 
1 1

தமிழ்நாட்டில் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அந்த அட்டை யாரெல்லாம் பெற விண்ணப்பிக்கலாம், உழவர் அட்டை பெறுவது எப்படி? என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் - கீழ் உழவர் பாதுகாப்புத்திட்ட அட்டை (மெரூன் நிறம்)வைத்துள்ள நபர் இயற்கையாக மரணம் அடைந்தால் அவரின் குடும்பத்தினருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/- மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூபாய் 2500/- சேர்த்து 22,500/- வழங்கப்படும்.மேலும் அரசாணை எண்514-இன் படி நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு 04.08.2025-ற்கு பிறகு நிகழ்வு நடைபெற்றிருப்பின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000/ மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.10000/- மொத்தம் ரூ.40000/- மற்றும் விபத்து நிவாரணத்திற்கு ரூ.2,00,000/-, விபத்தினால் ஏற்படும் உடல்உறுப்பு இழப்பிற்கு ரூ.1,00,000/ என உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

உழவர் பாதுகாப்பு அட்டை அப்டேட்

இதில் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2500/. தொடர்புடைய பஞ்சாயத்து மூலம் அளிக்கப்பட்டிருப்பின் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உறுப்பினராக உள்ள நபரின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/- மட்டுமே வழங்கப்படும் எனவே முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பின்வரும் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான ஓய்வூதியம் (TB,CANCER,KIDNEY DISEASES )மற்றும் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் குழந்தைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு நிகழ்வு நடைபெற்ற நாளிலிருந்து 6 மாததிற்குள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய கிராம நிருவாக அலுவலர் மற்றும் தனிவட்டாட்சியர் (சபா.தி) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும் தவிர்க்க இயலாத மற்றும் அறியாமையின் காரணங்களினால் காலதாமதமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுக்கும் உரிய அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகு பயன்பெற இயலும் (காலதாமத காலம் அதிகபட்சம் 1 % வருடம் வரை) எனவே மேற்கண்டவாறு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற நீங்கள் வசிக்கும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சரக வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் - யார் விண்ணப்பிக்கலாம்?

விவசாயத் தொழிலாளர்கள்: நிலம் இல்லாமல் விவசாயக் கூலி வேலை செய்பவர்கள்.

சிறு/குறு விவசாயிகள்: 2.50 ஏக்கருக்கு மிகாத நன்செய் நிலம் அல்லது 5.00 ஏக்கருக்கு மிகாத புன்செய் நிலம் வைத்து நேரடியாகச் சாகுபடி செய்பவர்கள்.

வயது வரம்பு: 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள்.

விவசாயம் சார்ந்த தொழில்களான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் செய்பவர்களும் இதற்குத் தகுதியானவர்கள்.

2. தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை (Ration Card) மிக முக்கியமானது. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், புகைப்படம் (Passport Size), நிலம் வைத்திருப்பவர்கள் என்றால் பட்டா/சிட்டா நகல்.

3. விண்ணப்பிக்கும் முறை

நீங்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:

* கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம்: உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சேர விரும்புவதாகக் கூறி விண்ணப்பப் படிவத்தைப் பெறவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மேற்கண்ட ஆவணங்களை இணைத்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும். அவர் உங்கள் விவரங்களைச் சரிபார்த்துப் பரிந்துரை செய்தவுடன், வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அட்டை வழங்கப்படும்.

* இ-சேவை மையம் (E-Sevai) மூலம் (ஆன்லைன்): உங்களுக்கு அருகிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையத்திற்குச் செல்லவும். அங்கு உழவர் பாதுகாப்புத் திட்டப் பதிவிற்கான கட்டணத்தைச் செலுத்தி (சுமார் ₹60), ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு (Acknowledgement Receipt) வழங்கப்படும். அதை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.