புதுச்சேரியில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்கள் யார்? தலைமை அறிவிப்பு
புதுச்சேரியில் NDA தொகுதியில் 2 இடங்களில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ந் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16ந் தேதி தொடங்கியது. புதுச்சேரி என்டிஏ தொகுதி பங்கீட்டில் என்ஆர்காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுகவுக்கு கடந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குகின்றனர். அதேபோல் புதிய கட்சியான லாட்டரி அதிபரின் லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் NDA தொகுதியில் 2 இடங்களில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உப்பளம் தொகுதியில் அன்பழகனும், உருளையன்பேட்டையில் காந்தி அவர்களும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த முறை அதிமுக டெபாசிட் இழந்த உருளையன்பேட்டை தொகுதி மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் NDA கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு, இம்முறை உப்பளம், உருளையன்பேட்டை என 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

