வண்டலூரில் வெள்ளை புலி தாக்கி ஒருவர் காயம்!!

 
tn

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கியதில் விலங்குகள் காப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

vandalur zoo

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என்று அழைக்கப்படும் இப்பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளை தொடர்ந்து கண்காணித்து அவற்றை பராமரித்து வருகின்றனர். 

tn
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி நகுலன் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூண்டில் அடைக்கப்பட்டது.  சிகிச்சை அளிக்கும் பணியில்  மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.  வெள்ளை புலியின் பராமரிப்பாளர் செல்லையா  என்பவரும் உடன் இருந்தார்.அப்போது திடீரென ஆக்ரோஷம் அடைந்த வெள்ளைப்புலி பராமரிப்பாளரை  தாக்கியது.  வெள்ளைப் புலி தாக்கியதில் பராமரிப்பாளர் செல்லையாக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது  வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.