எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது? சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும்?

 
1

மேஷ ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் செவ்வாயை அதிபதியாகக் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசிக்காரர்கள் உடன் மணமுடித்து வைத்தால் அவர்களின் உறவில் கட்டாயம் பிளவுகள் உருவாகும். விருச்சிக ராசிக்காரர்களும் செவ்வாயின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறீர்கள். இவ்விரு ராசிகளும் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருந்தாலும் பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் நெருப்பின் குணத்தை கொண்டிருப்பார்கள் அதற்கு நேர் எதிரான நீரின் குணத்தை விருச்சிக ராசிக்காரர்கள் கொண்டிருப்பதால் இந்த இரண்டு ராசிகளும் இணையும் பட்சத்தில் தம்பதிகள் இருவருக்கும் புரிதல் என்பது இருக்காது. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல மாட்டார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்களுடன் இணைவதை தவிர்ப்பது நல்லது. நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் நில ராசிக்காரர்களுடன் தாராளமாக இணையலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள். சுக்கிரன் என்றால் சொல்லவா வேண்டும்? அவர் தான் காதல் தலைவன் ஆயிற்றே! நில ராசியான ரிஷப ராசிக்காரர்கள் நீர் ராசியான விருச்சிக ராசிக்காரர்கள் உடன் இணைந்தால் உங்களது வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இல்லற சுகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கடைசி வரை ஒற்றுமையாக இணைந்து இருப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் புத பகவானை அதிபதியாக கொண்டவர்கள். பொறுமையின் சிகரமாக விளங்க கூடியவர்கள் மிதுன ராசிக்காரர்கள். மற்றவர்களை புரிந்து கொள்ளும் உணர்வு மற்ற ராசிக்காரர்களை விட உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஒருவர் தவறு செய்தால் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என்று அவர்கள் இடத்திலேயே நின்று காணக் கூடியவர்கள் நீங்கள். அத்தகைய சிறப்பம்சம் கொண்ட நீங்கள் கடக ராசிக்காரர்கள் உடன் இணையும் பொழுது உங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் உங்கள் துணையின் விருப்பத்தை அறிந்து செயல்படக் கூடியவர்கள் எனவே இவ்விரு ராசிக்காரர்களும் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் ஆகிய நீங்கள் இணைய கூடாத ஒரு ராசியாக கன்னி ராசி பார்க்கப்படுகிறது. நெருப்பு ராசியான சிம்ம ராசிக்காரர்கள் என்றும் தலைமையிடத்தில் இருப்பதையே விரும்புபவர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உங்களுக்கு குறைவாகவே இருக்கும். நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்வதை விட உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதை கன்னி ராசிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே கன்னி ராசிக்காரர்களுடன் நீங்கள் இணையும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் ஆனந்தமான வாழ்க்கை அமைந்தாலும் சிறிது காலம் கழித்து உங்கள் இருவருக்கும் இடையே கட்டாயம் பிரச்சினைகள் மற்றும் பிளவுகள் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களாகிய நீங்கள் மகரம் அல்லது விருச்சிக ராசிக்காரர்கள் உடன் இணைந்தால் உங்களது வாழ்க்கை பிரகாசம் அடையும். நில ராசியான கன்னி ராசிக்காரர்கள் நில ராசியான மகரத்துடனோ, நீர் ராசியான விருச்சிகத்துடனோ சேரும் பொழுது பிரச்சனைகள் இன்றி நல்ல வாழ்க்கை அமையும். இவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். நில ராசியான கன்னி ராசிக்காரர்கள் இணைய கூடாத ராசியாக மிதுன ராசிக்காரர்கள் பார்க்கப்படுகிறார்கள். இவ்விரு ராசிகளும் இணையும் பொழுது சண்டை, சச்சரவுகள் அதிகமாக காணப்படும். சிறு சிறு விஷயங்களில் கூட பெரிய விஷயமாக மாற்றி விடுவார்கள். கடைசியில் இருவருக்கும் பிரிவுதான் ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் காற்றை அடிப்படையாக கொண்டவர்கள். நீங்கள் மீன ராசிக்காரர்களுடன் இணையும் பொழுது பிரச்சனையே வாழ்க்கை என்ற சூழ்நிலையை எதிர்கொள்ள நேரலாம். இவ்விரு ராசிக்காரர்களும் இடையே திருமண பந்தம் ஏற்பட்டால் சரியான புரிதல் இருக்காது. கடலில் மிதக்கும் படகை போல அவர்கள் வாழ்க்கை தத்தளித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான அறிவாற்றல் இவர்களிடம் இருக்காது. அதனால் இவர்களுடைய வாழ்க்கை சிறப்புற அமையாது.

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள் உங்களது இணையை அதிகமாக விரும்புவீர்கள். பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பதை விட உங்களுக்கு காதல் திருமணமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக இருக்கும். குறிப்பிட்ட வயதிற்குள் உங்களது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் சம்பாதித்து விடுவீர்கள். தனுசு ராசிக்காரர்கள் இணையக் கூடாத ராசிக்காரர்களாக கருதப்படுவது மகர ராசிக்காரர்கள். இவ்விரு ராசிக்காரர்களும் இணையும் பட்சத்தில் அன்பு குறைந்து இருவருக்கும் இடையே அதி விரைவில் வெறுப்பு வளர்ந்து விடும்.

ஜோதிடத்தின் படி, கும்பம் மற்றும் மகரம் இரு ராசிகளின் அதிபதி சனி பகவான். சர ராசியை சேர்ந்த மகரம், ஸ்திர ராசியை சேர்ந்த கும்பத்துடன் சேரும் போது இருவரும் வித்தியாசமான நடத்தையின் காரணமாக தினம் தினம் சண்டையிட்டுக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் இருக்கும்.மகர ராசிக்காரர்கள் இதில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கும் அதே நேரத்தில் கும்ப ராசியினர் உறவை வளர்ப்பதில் மிக விட்டுக் கொடுத்து செல்பவராக இருப்பார்கள். இருப்பினும் இவர்களின் இருவரின் சித்தாந்தங்களும் அதிக வேறுபாடு இருப்பதால் கும்பம் மகரத்தின் உறவில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ஜோதிடத்தின் படி, மீனம் மற்றும் விருச்சிகம் ராசிகளுக்கிடையே நல்ல திருமண பொருத்தம் இருக்கும். குரு, செவ்வாய் என நட்பு கிரகங்களின் ராசிகள் என்பதால் இரண்டிற்கும் பொருத்தம் சிறப்பாக இருந்தாலும் விருச்சிக ராசியினர் தனது துணையிடம் அன்பை வெளிப்படுத்துவதில் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாகவும், மீன ராசியினர் தன் மீது காதல் இல்லையோ என்ற எண்ணத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உருவாகுவதால் சிக்கல் அதிகரிக்கிறது.இது தவிர, அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டிற்கான ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், மீனம் ராசியினர் சிறிய சுதந்திரத்தை எதிர்பார்ப்பவராக இருப்பார்கள். ஆனால் விருச்சிக ராசியினர் துணை மீது சந்தேகத்திற்கிடமானவராகவே பார்ப்பதால் தங்கள் உறவில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.