இன்று முதல் அமல் : எந்தெந்தப் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது?

 
1

நெய், சீஸ், வெண்ணெய், சிற்றுண்டி, கெட்ச்அப், ஜாம், உலர் பழங்கள், காபி மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களும் மலிவாக மாறும், அதே போல் தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற உயர் ரக பொருட்களும் மலிவாக மாறும். ஜிஎஸ்டி மாற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் ஏற்கனவே விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளன.

அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

• 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்திக்கும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.5 வரை குறைகிறது.

• சாக்லெட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடூல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைகிறது.

• பன்னீருக்கு இருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.300 ஆக இருந்தால் ரூ.15 குறைந்து விடுகிறது. அதே போல் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு இருந்த 12 சதவீத வரி 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலையும் குறைகிறது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 குறைந்து ரூ.560 ஆகிறது.

• உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைக்கப்பட்டு உள்ளது. மக்களின் வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ‘32 இன்ச்’-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், ‘டிஷ் வாஷர்’ ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்து விட்டது. இதனால் இந்த பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைகிறது. உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆகி இருக்கிறது.