தொழில் தொடங்க இந்தியாவின் 'நம்பர் 1' மாநிலம் எது? தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?
உள்கட்டமைப்பு திறன், திறமையான மனிதவள ஆற்றல் அளவு, அமைப்பு திறன், நிதி ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடுகளை நீண்ட காலம் ஈர்க்கும் இந்தப் பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
உள்கட்டமைப்பு, வணிக சூழல், நிதி ஆரோக்கியம் உள்ளிட்ட காரணங்களினால் குஜராத் முதலிடத்தில் உள்ளது. சிறந்த துறைமுக உள்கட்டமைப்பு, மின் விநியோகம், வலுவான தொழில்துறை அமைப்பு தொழிலுக்கான சூழ்நிலை ஆகியன அம்மாநிலத்திற்கு வலு சேர்த்துள்ளனமஹாராஷ்டிரா 53.7 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
நிதி சந்தை, வலுவான தனியார் பங்களிப்பு, புதுமை கண்டுபிடிப்புக்கான உள்கட்டமைப்புகள் இங்கு உள்ளன.தமிழகம் 53.3 புள்ளிகளுடுன் 3வது இடத்தை பிடித்துள்ளது. உற்பத்தி தளம், ஏற்றுமதியில் சிறந்த பணி, சிறந்த துறைமுக கட்டமைப்பு மற்றும் முதலீட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகியவை தமிழகத்தில் வலுவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா (5வது) ம.பி ( 7வது இடம்) ஆகிய மாநிலங்களும் உள்ளன. உபி., 19 வது இடத்தை பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்கள் முறையே 25 மற்றும் 26வது இடத்தில் உள்ளன.மலை சார்ந்தமற்றும் வடகிழக்குமாநிலங்களில் உத்தரகாண்ட் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களை அசாம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை கோவா முன்னணியில் உள்ளது. அடுத்த இடங்களில் டில்லி மற்றும் சண்டிகர் ஆகியன உள்ளன.

