"என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்" - சரத்குமார்

 
sarathkumar sarathkumar

சென்னையில் கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் இணைவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சரத்குமார். கூட்டணியில் இணைந்த பின் பாஜக மாநில தலைமையகமான கமலாலயம் சென்றார்  சரத்குமார்.

tn

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் , “இந்தியா  கூட்டணியில் பயணிக்கிறோம் என அறிவித்த பிறகு மரியாதை நிமித்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினேன்.

Sarathkumar

நாளை மறுநாள் தொகுதி பங்கீடு, மற்றும் விருப்பமான இடங்கள் குறித்து ஆலோசித்த பிறகு சமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அறிவிப்போம்;

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற முறையில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்” என்றார்.