கைலாசா எங்குள்ளது ? நித்தியானந்தாவின் முக்கிய அறிவிப்பு

 
tt

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து  புகழ்பெற்றார்.  அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று அவரே அறிவித்துள்ளார்.   அதற்கு , ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார்.  இதையடுத்து கைலாசா நாட்டின்  குடியுரிமைக்கு அழைப்பு விடுத்தார்.

நித்தியானந்தா இருக்குமிடம் தெரிந்தது! வீடியோவால் மாட்டிக்கொண்ட நித்தி….

இ-குடியுரிமை பெற தேவையான விவரங்கள் கைலாசா இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கைலாசாவை அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் வேண்டுகோள் விடுத்திருந்தார் நித்தியானந்தா. ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

k

இந்நிலையில் கைலாசா  நாடு இருக்கும் இடத்தை ஜூலை 21ஆம் தேதி குரு பூர்ணிமா விழா கொண்டாடும்போது நித்தியானந்தா அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாசா செல்ல பலரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினரும் காத்திருக்கின்றனர்.  


இந்த சூழலில் குரு பூர்ணிமா விழாவில் நேரலையில் நித்தியானந்தா கைலாச நாடு இருக்கும் இடத்தை அறிவிக்க உள்ளார் என்ற தகவல்  பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.