எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

 
rain

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் (Murasu Cyclone) தமிழ்நாட்டை விட்டு விலகி, வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'முரசு' புயல், தற்போது தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி வடக்கு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடிப் புயல் அபாயம் விலகியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், புயலின் சுழற்சி மேகக் கூட்டங்கள் நிலப்பகுதியை நோக்கி நகர்வதால், வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புயல் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதியான நெல்லூர் - நரசப்பூர் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.