11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ!!

 
dpi building

11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.

school

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் - 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 940 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

tn