எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி..!

 
1

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட குற்றச்சம்பவங்கள் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு? மகளிர் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு? என இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.