என்ஜினீயரிங் அட்மிஷன் எப்போது தொடங்குகிறது..?

 
1

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, உயர் கல்வித் துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், 'ஆன்லைன்' வழியாக, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் பணிகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில் அடுத்த மாதம் (மே) 2வது வாரத்தில், என்ஜினீயரிங் கவுன்சிலிங் விண்ணப்பபதிவு தொடங்கும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.


மாணவ, மாணவியர், www.tneaonline.org என்ற இணையதளத்தை, தொடர்ந்து பார்வையிட, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.