தூய்மை பணியாளர்கள் எப்ப செவிலியர் ஆனங்க? அரசு மருத்துவமனையின் அவலம்

 
செவிலியர்கள்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்நோயாளிகள் பிரிவில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டே வந்த பணியாளர் ஒருவர் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் பாட்டில்களை மாற்றுவதும், பெண் தூய்மை பணியாளர் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தும் காட்சிகளும் அதில் வெளியாகி உள்ளன.


உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.