மெஸ்ஸி பெயரை வைத்து மோசடியா? கொல்கத்தாவில் நடந்தது என்ன? ரூ.20,000 செலவு பண்ணி எல்லாம் போச்சு... கதறும் ரசிகர்கள்

 
s s

கொல்கத்தாவில் உலக புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸியை பார்க்க சென்ற மைதானத்தில் கலவரம் ஏற்பட்டதால், 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்து மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தமிழ்நாட்டு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். இந்தியா சுற்று பயணத்தில் மேற்குவங்கத்தில் கொல்கத்தா நகரம் ஐதராபாத், மும்பை டெல்லி நான்கு முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.  முதற்கட்டமாக கொல்கத்தா நகரில் தனது 70 அடி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்பு நகரின் பெரிய மைதானமான சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ரசிகர்களை பார்ப்பதற்கும் அதே போல் மைதானத்தில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடுவது ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் என திட்டமிட்டு இருப்பதாக தனியார் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்கட்களை மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே விளம்பரப்படுத்தி ரூபாய் 2,500 தொடங்கி தனது டிக்கெட்டுகளை இந்தியா முழுக்க விற்றுள்ளது.   

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெஸ்ஸியை பார்க்க சென்ற ரசிகர்கள் மைதானத்தின் கலாரியில் அமர்ந்து இருந்த நிலையில் காலை 11.30 மணிக்கு மெஸ்ஸி மைதானத்திற்கு வந்துள்ளார். 20- 30 நிமிடத்திற்கு மேலாகியும் மைதானத்திற்குள் வந்த மெஸ்ஸியை மேற்கு வங்கத்தின் தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு செல்பி எடுப்பது கையொப்பம் வாங்குவது என ரசிகர்கள் பார்வைக்கு தெரியாதவாறு இருந்துள்ளனர்.

செலவு செய்து பல்வேறு மாநிலங்களில் இருந்து மெஸ்ஸியை பார்க்க வந்த அவரது ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகி மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. மைதானத்தில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக மெஸ்ஸியன் பாதுகாப்பு கருதி மைதானத்தில் இருந்து வெளியேறி சென்றார். இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகள் என கூறி டிக்கெட்டுகள் வாங்கி வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர்கள் கோபத்தில் முதலில் வாட்டர் கேன்களை தூக்கி வீசினர். பின்பு மைதானத்திற்குள் புகுந்து அங்கிருந்த பேனர்கள் இருக்கைகள் சூறையாடினர். மைதானமே கலவரமாக மாறியது இந்த சம்பவம் நாள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழ்நாட்டில் இருந்து கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்சியை பார்ப்பதற்கு சென்ற அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்ததாகவும், முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் செய்த கோளாறினால் இந்த கலவரம் நடைபெற்றதாகவும் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தனர். சமூக வலைதளங்களில் டிக்கெட்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டதை பார்த்து ஆன்லைன் மூலமாக டிக்கெட் விலை முன்பதிவு செய்து கொல்கத்தா சென்றோம். காலை 8:30 மணி அளவில் தொடங்கி மைதானம் திறக்கப்பட்ட நிலையில் அப்பொழுது மெஸ்ஸியை பார்ப்பதற்கு மைதானத்திற்கு சென்று விட்டோம். 10:30 மணி அளவில் மெர்சி வருவார் என நிகழ்ச்சி நிரலில் கூறியிருந்தார்கள் ஆனால் மெஸ்ஸி 11.30 க்கு வந்தார். அவரை ரசிகர்கள் பார்க்காதவாறு தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சூழ்ந்து கொண்டதால் ரசிகர்கள் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாகவும், அதனால் மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதாகவும் சலசலப்பை காரணம் காட்டி மெஸ்ஸி என் பாதுகாப்பை காரணம் காட்டி மெஸ்ஸி மைதானத்தில் இருந்து வெளியே புறப்பட்டார். மெஸ்சி வெளியே சென்றதை உணர்ந்த ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்த நிலையில், கோபம் அடைந்து முதலில் விசில் அடித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் அதற்கு அடுத்து வாட்டர் பாட்டில்களை தூக்கி எறிந்து பின்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் இயற்கைகளை தூக்கி எறிந்து மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி கலப்புரத்தில் ஈடுபட்டதாகவும் இதற்கு மேல் இங்கு இருப்பது நல்லதல்ல என ஒன்று தாங்கள் கிளம்பி வந்ததாகவும் தமிழ்நாட்டு ரசிகர்கள் தெரிவித்தனர். 

மெஸ்ஸி அந்த மைதானத்தில் முதலில் கால்பந்து விளையாட்டு விளையாடுவார் பிறகு சிறுவர்களோடு விளையாடுவார் ரசிகர்களுக்கு கைஅசைப்பார் என நிகழ்ச்சி நிரலில் பல்வேறு திட்டமிடல் இருந்த நிலையில் மொத்தமும் ஏமாற்றம் ஏற்பட்டதாக உணர்வதாக செலவு செய்து சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டு ரசிகர்கள் தங்களது கவலையை பேடியாக தெரிவித்தனர்.