அச்சுறுத்தும் வகையில் நடுரோட்டில் வீலிங்- இளைஞர் வெளியிட்ட வீடியோ

 
பைக் வீலிங்

தமிழகத்தில் TTF வாசனின் வீலிங் சாகசத்தை பின்பற்றி இளைஞர்கள் பலரும் இவரை போன்ற எண்ணங்களிலேயே வீலிங் செய்தவாறே வாகனங்களை இயக்குவதும், சாகசங்களை நிகழ்த்துவதுமாக இருந்து வருகின்றனர்.

இதற்கு பல வருடங்களாக விடை இல்லாமல் இருந்துவந்த நிலையில் முதல் முதலாக காஞ்சிபுரத்தில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியது தொடர்பாக வழக்குப்பதிவானது செய்யப்பட்டது. இவரில் ஆரம்பித்து அண்மையில் திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்தவரே பட்டாசுகளை வெடித்து அல்ட்ரா சிட்டி செய்த இளைஞர்களையும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலே செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலே இளைஞர் ஒருவர் வீலிங் சாகசம் நிகழ்த்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான duke_gokul என்கிற ஐடி-ல் பதிவேற்றிருக்கிறார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களிலே வேகமாக வைரல் ஆகி பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விதவிதமாக கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் தூக்குவதும், இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவதும் இது போன்ற காட்சிகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.