வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்! நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு

 
whatsapp

தகவல் பரிமாற்றி செயலியான வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

whatsapp

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு தகவல் பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா  19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. வாட்ஸ் அப்பில் Delete for everyone- க்கு பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதனை உடனே UNDO செய்து கொள்ளும் வகையில் மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனால் இனி அவசரப்பட்டு Delete for me கொடுத்துவிட்டோமே என கவலைப்பட வேண்டாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r