"பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகள்" - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

 
stalin

வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை மத்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே பரப்புகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

 stalin

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  முத்தமிழறிஞர் கலைஞரின் அன்புடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உங்களில் ஒருவன் மடல், " திமுக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் வில்லில் தொடுக்கப்பட்ட கலை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பது போல செயல்பட வேண்டும் . நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாக செயல்பட வேண்டும். திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம்.  அயோத்தி ராமர் கோயில் அரசியலை அமைதியான கோதண்ட ராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடி இருக்கிறார். இளைஞரணி மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற திமுகவின் அரசியல் எதிரிகளும் , தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் பரப்பி திசை திருப்ப நினைக்கிறார்கள்.  ஆளுநரிடம் இருப்பது பக்தியா? பகல் வேடமா?

 stalin

 இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களே  செயல்படுகிறார்கள்.  பாஜகவில் உயர் பொறுப்பை பெற்றவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யூனிவர்சிட்டிகளாக உள்ளனர். பாஜகவின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்காத போக்குடன் செயல்படுகின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை என திட்டமிட்டு வதந்தி. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  திட்டமிடப்பட்ட பரப்பிய வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. அவர்களின் தலையில் குட்டு வைப்பது போல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம். தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம் . தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பக்தியை தங்களது தனிப்பட்ட உரிமையாக ,அக மகிழ்வாக, ஆன்மீக தேடலாக கொண்டவர்கள் பெருமாளையும் வழிபடுவார்கள் பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள்.  பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்கள் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தமிழர்கள் பெருமானையும் வழிபடுவார்கள்;  பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.