பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீஸ் அதிரடி திட்டம்

 
s

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து  அரக்கோணம் மற்ற புறநகர் ரயில் நிலையம் வரையிலான 87 ரயில் நிலையங்கள் பரபரப்பான ரயில் நிலையம் என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மின்சார ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகளை ஒருங்கிணைத்து புதிய வாட்ஸ் ஆப் குழு துவக்க ரயில்வே காவல் துறை முடிவு செய்துள்ளது. ரயிலில் திண்பண்டங்கள் விற்கும் சிறு பெண் வியாபாரிகள், பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன், செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய புதிதாக துவக்கப்பட உள்ள வாட்ஸ் ஆப் குழு பயன்படும் என நம்பிக்கை கூறியுள்ள ரயில்வே போலீசார், இதனால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதால் பெண் பயணிகளின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் கூறுகின்றனர்.


பத்து நாட்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தமிழக முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது.