என்னாச்சு..? திடீரென ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை...!
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் புத்தகங்கள் என குற்றம் சாட்டப்பட்ட 25 புத்தகங்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. இதில் சட்ட நிபுணர் ஏ.ஜி. நூரானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரின் புத்தகங்களும் அடங்கும்.
ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு புத்தகக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவறான தகவல்களை பரப்புவது, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது அல்லது இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் புத்தகங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதே இந்த சோதனையின் நோக்கம் என்று அவர் கூறினார். தேச விரோத உள்ளடக்கத்தை எதிர்த்து, தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். தேச விரோத உள்ளடக்கத்தை எதிர்த்து, தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பல புத்தகக் கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட புத்தகங்கள் விற்பனையை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனையின் போது, அனைத்து புத்தகக் கடை உரிமையாளர்களும் தடை செய்யப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த உத்தரவை மீறினால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

