எதுக்கெடுத்தாலும், நாங்க மிசாவை பார்த்தவங்க மிசாவை பார்த்தவங்கன்னு சொல்றாங்க - முதல்வர் விஜய் ஆவேச பேச்சு..!

 
1

மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசா பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஆவேசப் பேச்சு..

சட்டசபையில் எலும்பை உடைப்பேன் என எம்எல்ஏ பேசினார் என்றும் இது போன்ற பேச்சுக்கள் தற்போது தேவையா என்றும் கேட்டார். பெண்கள் குறித்து யாராவது ஒருவராக பேசினார்.சட்டம் தரப்படும் என்ற தெரிவித்துள்ளார். பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனக்கும் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிப்பது எந்த தவறும் இல்லை என்றும் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திமுகவிற்கு ஓட்டு போடாததால் பேசுகின்றனர் எனவும் இது போன்ற பேசிப் பேசி எதிர் கட்சி வரிசையில் இருப்பதாகவும் தெரிவித்தார். யாருக்கும் நான் அறிவுரை கூற வரவில்லை என்றும் இதுதான் ரியாலிட்டி எனவும் தெரிவித்தார். சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும் என்றும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் ஏன் இந்த அரசியலில் இருக்க வேண்டும் என்பது ஒன்று கேள்விகள் எழுதுவதாகவும் தெரிவித்தார்.

திமுகவினருக்கு அட்வைஸ் கூற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து திமுகவினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை என்று முதல்வர் விஜய் பதில் கூறினார்.


தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

மேலும் பேசிய விஜய், இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சியினரால் பல அவமானங்களை சந்தித்தார். அந்தக் காலத்தின் துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு? நமது நண்பர்கள் எது பேசினாலும் நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். மிசாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் விஜய் குறிப்பிட்டுப் பேசினார்.