நாங்கள் சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல; குடிநீர்த் திட்டம் - கேரளா அமைச்சர்..!

 
1

“சிலந்தியாற்றில் கட்டப்படுவது தடுப்பணை அல்ல, அப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் குடும்பத்தினருக்கான குடிநீர்த் திட்டம்தான் செயல்படுத்தப்படுகிறது,” என்று செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார்.

“சிலந்தியாற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை.

“ஜல் ஜீவன் நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ், இந்தப் பகுதியில் வசிக்கும் 7,000 ஆதிவாசி மக்களுக்காக குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

“இங்கு நீர்வீழ்ச்சி உள்ளதால், ஆற்றிலுள்ள தண்ணீர் சமநிலையில் இல்லாமல் உள்ளது. இதனால், குடிநீர் விநியோகம் செய்யமுடியாமல் உள்ளது.

“இதன் காரணமாக தண்ணீரை சமநிலைப்படுத்தும் பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன. மற்றபடி தடுப்பணை எதுவும் கட்டவில்லை. தமிழக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் இந்தப் பகுதிக்கு நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்,” என்று கூறினார்.