வெற்றி பெற்ற 21 நாளில் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய என்ன காரணம்?- பரபரப்பு விளக்கம்
வெற்றி பெற்ற 21 நாளில் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய என்ன காரணம்?- பரபரப்பு விளக்கம்சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காகவும், தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டும் ராஜினாமா செய்ததாக அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் விளக்கம் அளித்தனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார், “திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால் அந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக எங்களுடைய எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.நாங்கள் எடுத்த முடிவு சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காகவும், தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டும் எடுத்தது. திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. ஜெயலலிதாவை போன்று பெண்களுக்கான நல திட்டங்களை CM விஜய் செய்வார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் ஆட்சி அமைக்கும்பொழுது முதல் கையெழுத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் முன்னெடுப்பார். அதேபோல் இப்போதைய முதலமைச்சர் விஜய்யும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்திருக்கிறார். அவர் பதவியேற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். மக்கள் அனைவரும் அவரிடம் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். முதலமைச்சர் விஜய் நல்லாட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

