”என்ன சார்.. என்ன பேசுனாலும் பேச விடமாட்றீங்க..” அமைச்சர் விஸ்வநாதனை கலாய்த்த உதயநிதி..!

 
11

”என்ன சார்.. என்ன பேசுனாலும் பேச விடமாட்றீங்க.. என்ன சார் பிரச்சனை”.. அமைச்சர் விஸ்வநாதனை கலாய்த்த உதயநிதி.. பேரவையில் கலகலப்பான சூழல்.. குலுங்கி குலுங்கி சிரித்த உறுப்பினர்கள்!

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்லவநாதன், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விளையாட்டு அரங்கம், மாணவ மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைத்து தர வேண்டும், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 188 கல்லூரிகளில் 115 கல்லூரிகளுக்கு விளையாட்டு மைதானங்கள் உள்ளதாகவும், 73 கல்லூரிகளில் முறையான விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வேலூர் மாவட்டத்தில் 14 கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் 6 அரசு கல்லூரிகள் என்றும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், உறுப்பினர் கேட்டது விடுதி தொடர்பாகவும் இருப்பதால், அதுகுறித்தும் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் விஸ்வநாதன், கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அகரம் அரசு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் அமைச்சர் தொடர்ந்து வேறு விவகாரம் குறித்து பேசத் தொடங்கியதால், அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட விளையாட்டு அரங்கம் தொடர்பாக மட்டுமே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாகவும், அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கல்லூரிக்கு அரங்கம் கேட்டுள்ளார். ஆனால் அமைச்சர் அளித்த பதில், அவசரப்பட்டு யாரும் என்னிடம் கோரிக்கை வைத்துவிடாதீர்கள். இரண்டு, மூன்று முறை யோசித்து கேளுங்கள் என்பது போல் இருந்தது எனக் கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதற்கு அமைச்சர் விஸ்வநாதன், எதிர்க்கட்சித் தலைவர் அழகான கருத்தை பதிவு செய்ததாகவும், அவையில் எதையும் பேசக்கூடாதா? எனவும் கேள்வி எழுப்பியதால் மீண்டும் சிரிப்பலை பரவியது.