அதிமுக அலுவலக பொருட்களை திருடிச் சென்றவர் ஓபிஎஸ் - கே.பி.முனுசாமி தாக்கு!!

 
kp munusamy

அதிமுக ஆட்சியை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாகும் என ஓபிஎஸ் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

KP Munusamy

இது தொடர்பாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை எச்சரிக்கிறேன்2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.  அதிமுக அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடிச் சென்றவர் தான் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுக குறித்து பேச ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது . அதிமுக தொண்டர்களை அழைக்க ஓ. பன்னீர் செல்வத்திற்கு எந்த உரிமையும் இல்லை . ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டவர் ஓ .பன்னீர்செல்வம். பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்கம் முயன்றவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் மேலும் மேலும் சோதனை அளிக்கிறார்..குழப்பத்தை ஏற்படுத்த சிலர் அறிக்கை விடுகிறார்கள். 

ops

அ திமுக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் 18% வாக்குகளைப் பெற்றது; தற்போது ஈபிஎஸ் தலைமையில் அதிமுக 20.48% வாக்குகளை பெற்றுள்ளது. 2026 தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.