பரப்புரை ஓய்ந்தபின் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் என்னென்ன?

 
ச்

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பரப்புரை ஓய்ந்தது.

ச்
பரப்புரை ஓய்ந்தபின் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், “ இன்று மாலை 6 முதல் ஏப்ரல் 23இல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இன்று மாலை முதல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்த, பங்கேற்கக் கூடாது. தேர்தல் விளம்பரத்தை திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கத் தடை. வேறு தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயலற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகன ஏற்பாடு செய்ய வேட்பாளருக்கு அனுமதியில்லை” என்றார்.