உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன..? மனம் திறந்து பேசிய தவெக தலைவர் விஜய்..!
சென்னை நந்தனத்தில் நடந்த பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், கரூரில் என்ன நடந்தது என அந்த பகுதி மக்களிடம் கேட்டாலே அவர்கள் உண்மையை கூறுவார்கள். என் மீது வீண் பலியை சுமத்துகிறீர்கள் 'காவல்துறை அனுமதித்த நேரத்தில் நான் அங்கே இருந்தேன். கொஞ்சம் கூட வாய் கூசாமல் என் மீது பழியை போடுகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா?' என கொந்தளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அங்கே அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் விஜயையும், தவெகவினரையும் முடக்கிப்போட்டது.அதிலிருந்து விஜய் மீளவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் பேசிய விஜய் ‘கரூர் சம்பவத்தில் என் மீது பழிபோட்டார்கள். நாங்கள் இதிலெல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என நல்லவர் போல் நடித்துவிட்டு சட்டசபையில் நான் தாமதமாக வந்ததான் இதற்கு காரணம் என்று பேசினார் ஸ்டாலின் சார்.நாமக்கல்லில் இருந்து கரூர் வரைக்கும் நான் எவ்வளவு நேரத்தில் போனேன் என்று உங்களுக்கு தெரியுமா? நான் செல்லும் வழியெங்கும் எனக்காக காத்திந்த மக்களை நான் ஒதுக்கி விட்டு செல்ல முடியுமா?..
கரூரில் என்ன நடந்ததுன்னு அந்த கரூர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு புட்டு வெப்பாங்க.. என் மேல பழிய தூக்கி போடுறீங்க ..என்னமோ நாங்க அரசியலை பண்ண மாட்டோம் இந்த விஷயத்துல எல்லாம் நாங்க அரசியலை பண்ண மாட்டோம் .வீடியோ போட்டுவிட்டு போய் சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு என் மேல பழியை தூக்கி போடுறிங்க. போலீசார் எனக்கு அனுமதி கொடுத்திருந்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன். சதி செய்து என் மீது பழியை போட்டீர்கள். இதற்கு நான் நீதி கேட்டு வந்திருக்கிறேன் மக்கள்தான் எனக்கு நீதி வழங்க வேண்டும்.. நான் நீதி என்று சொல்வது வருகிற 23ஆம் தேதி நீங்கள் விசில் சின்னத்தில் வாக்களிப்பதுதான்’ என பேசியிருக்கிறார்.
மக்களே அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நீதி கேட்க வந்த விஜய்..வரும் ஏப்ரல் 23ஆம் தேதி உங்களுக்கான வாக்குசாவடியில் விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இது ஒரு தலைமுறைகான தேர்தல்.உங்களுக்கான தேர்தல் . அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்து இருக்கிறேன் .உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிற ஒருநாள் பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார்.

