வாட் ப்ரோ... Why bro.. விஜய் பாணியிலேயே அவரை கடுமையாக சாடிய சரத்குமார்..!

 
1

பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து விழா நடைபெற்றது. இதில் நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான சரத்குமார் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இப்போது இன்னொருவர் புதிதாக அரசியலுக்கு வந்துவிட்டார்.

அவரை பற்றி நான் பேசவே கூடாது என இருந்தேன். விஜய் என்ன பேசுகிறோம் என தெரிந்து கொண்டு பேச வேண்டும். நீங்கள் ஒரு மிகவும் பிரபலமான நடிகர். நானே சொல்லி இருக்கிறேன். நீங்கள் சூப்பர்ஸ்டார் அளவுக்கு இருக்கிறீர்கள். அதனால் சர்ச்சை கூட ஆனது. அரசியலுக்கு வருபவர்களை வரவேற்பவன் நான்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், உண்மையை பேசுங்கள். பேசும்போது கருத்தோடு பேசவேண்டும். உண்மையை பேசவேண்டும். விஜய் அலுவலகத்தில் ஸ்டாலின் கெட் அவுட் என போட்டிருந்த பகுதியில் கையெழுத்து போட பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டார்.

கையெழுத்து போட்டால் என்னை வெளியே அனுப்பி விடுவார்களோ என அவர் பயந்துவிட்டார். இல்லாவிட்டால் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட்டு இருப்பார். விஜய்க்கு அரசியல் வியூகத்தை சொல்லி கொடுப்பவர் தான் பிரசாந்த் கிஷோர். இந்தி தெரிந்தவரிடம் இருந்துதான் நீங்கள் தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டுமா?..யாரிடம் பிராடு செய்கிறீர்கள்.

வாட் ப்ரோ, ஏன் ப்ரோ, ஒய் ப்ரோ?. பிரசாந்த் கிஷோர் சொந்தமாக நின்ற இடத்தில் தோற்றுவிட்டார். அவர் இங்கு வந்து ஜெயிக்க வைத்துவிடுவாராம். பார்த்துவிடுவோம்” என பேசினார்.