சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது?- ஐகோர்ட்
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கைபிறப்பித்திருந்த நிலையில்
ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் சுற்றிக்கை பிறப்பிக்கப்பட்டதாக அரசு பதிலளித்தது.
காவல்துறைக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, எங்கு ஆடு சண்டை நடக்கிறது, சேவல் சண்டை நடக்கிறது என கண்காணிப்பதுதான் வேலையா? - உயர்நீதிமன்றம் நீதிபதி வி.லட்சுமிநாரயணன் கேள்வி எழுப்பியுள்ளார். மனுவுக்கு பதிலளிக்க டிஜிபி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

