"கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து" - அண்ணாமலை

 
Annamalai

நாளை சென்னை வரும் பாஜக தேசியத் தலைவர் நட்டா, மையக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்; முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நட்டா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ops

கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏ.சி.சண்முகம், ஜி.கே.வாசன், பாரிவேந்தரையும் சந்திக்கிறார் நட்டா; பிற்பகலில் காட்டாங்குளத்தூரில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் நட்டா பங்கேற்கிறார்.

Annamalai

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. நாளை சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை நடைபெறும். என் மண் என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். என் மண் என் மக்கள் நடைபயணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். ஜிஎஸ்டி வசூலில் நேரடியாக ரூ.50, மறைமுக மானியங்களாக ரூ.21 என மொத்தம் ரூ.71 அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது. மோடி பிரதமரானபோது மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 32%; தற்போது 42%ஆக அதிகரித்துள்ளது என்றார்.