இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்..?

 
OTT

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான 'ரணபாலி' (Ranabaali). ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் 19-ஆம் நூற்றாண்டு பஞ்சத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பிரம்மாண்ட ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், நவம்பர் 13-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகியுள்ளது.

அபிராம் நாயுடு இயக்கத்தில் உருவான 'ஹேப்பி ஜர்னி' (Happy Journey) திரைப்படம் நவம்பர் 13-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் (SunNXT) தளத்தில் வெளியாகியுள்ளது. லக்கி டிரா மூலம் ஐரோப்பாவிற்கு இலவசமாகச் சுற்றுலா செல்லும் வாய்ப்புப் பெறும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணி கொண்ட 7 பெண்களின் உணர்வுப்பூர்வமான மற்றும் கலகலப்பான பயணமே இப்படத்தின் கதைக்களமாகும்.

சாய் ரோனக் மற்றும் மதுபாலா நடிப்பில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பேண்டஸி திரைப்படமாக உருவான 'புஷ்பக விமானம்' (Pushpaka Vimanam),  (நவம்பர் 12) ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் வெளியாகியுள்ளது. சாதாரண லிஃப்ட் ஒன்றை டைம் மெஷினாகப் பயன்படுத்தித் தனது கடந்த காலத் தவறுகளைத் திருத்த முயலும் நடுத்தர வர்க்கத்து இளைஞன் சந்திக்கும் விபரீதங்களை இப்படம் விவரிக்கிறது.

ஆஹா வீடியோ (Aha Video) தளத்தில் இரண்டு முக்கியத் திரைப்படங்கள் வெளியாகின்றன. அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தருண் பாஸ்கர் நடிப்பில் உருவான நகைச்சுவை குடும்பத் திரைப்படமான 'கிரேஸி கல்யாணம்' (Crazy Kalyanam) நவம்பர் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தனது மூத்த மகளின் திருமண வாழ்க்கையால் அவமானப்படும் தந்தை, இளைய மகளுக்குப் பணக்கார மாப்பிள்ளை பார்க்க, அவளோ தனது சிறுவயது நண்பனைக் காதலிப்பதால் ஏற்படும் திருமணக் குழப்பங்களே இதன் கதையாகும்.

சுப சாய் வெங்கட் இயக்கத்தில் உருவான 'கிகு சிரஞ்சீவி' (Kiku Chiranjeevi) என்ற த்ரில்லர் திரைப்படம் நவம்பர் 14-ஆம் தேதி ஆஹா வீடியோ தளத்தில் வெளியாகிறது. காதலி விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற முயலும் இளைஞன், திடீரென ஆக்சிஜன் குறைபாடு கொண்ட ஒரு மர்மமான ஆபத்தில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுவதே இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களமாகும்.