விஜய்யிடம் “உங்கள் பெயர் என்ன?” எனக் கேட்ட சிபிஐ அதிகாரிகள்..!
கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விஜய் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் முதலில் கேட்ட கேள்வி உங்கள் பெயர் என்ன என்பதுதான். சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் புரியவில்லை என்றால் அதை விளக்குவதற்கும் அதை தவறில்லாமல் எழுதுவதற்கும் சிபிஐ அதிகாரிகள் ஸ்டேனோகிராபரை கொடுத்திருக்கிறார்கள். அவர் விஜய்க்கு உதவி வருகிறார். கேள்வி வினாத்தாள் போன்ற சிறிய புத்தகத்தை தயார் செய்து வைத்து அதை விஜய்யிடம் கொடுத்து விடைகளை பெற்று வருகிறார்கள் சிபிஐ அதிகாரிகள். பெரும்பாலான கேள்விகள் ஆம் இல்லை, தெரியும் தெரியாது என்பது போல தான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் கைப்பட டிக் செய்து பதில் அளித்துவருகிறார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு
ஐஜி நிர்மல் குமார், ஜோஷி ஆகியோரும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். திகார் சிறையில் பணிபுரியும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளும் சிபிஐ அலுவலகத்திற்கு வந்துள்ளனர். கரூர் வழக்கில் ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார் கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது


