எங்களுடைய காவல் துறை விசாரணையில் என்ன குறை..? கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது அவமதிப்பதாகத்தான் பார்க்கிறேன் - சீமான்..!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை. மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரானது. அதனை எப்போதும் ஒரு அவமதிப்பாக பார்க்கிறேன்.
எங்களுடைய காவல் துறை விசாரணையில் என்ன குறை. அரசு தோல்வியை ஒத்துக்கொள்கிறதா? சிபிஐயில் இருக்கும் அதிகாரிகளுக்கு 2 அல்லது 3 மூளைகள் உள்ளதா?இத்தனை ஆண்டுகளில் சிபிஐ வசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா? நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் துறை, மத்திய புலனாய்வுத் துறை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்றது. சிபிஐ விசாரணையில் என்ன கிடைக்கப் போகிறது. சிறந்த தமிழ்நாடு காவல்துறையை அவமதிக்கிறார்கள்.
சிபிஐ விசாரணை என்பது காலத்தை கடத்தி விடுவதும், அதனை மறக்கடித்து வேறு பக்கம் திருப்பி விடுவது தான். 2 மாதத்தில் விசாரணையை முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யுமா?. இப்போதகைக்கு விசாரணை சிபிஐயிடம் இருக்கிறது. அதனால நாம் ஒன்றும் பேச முடியாது. இது ஒரு தேச அவமதிப்பு. மாநில அவமதிப்பு. தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன் என்று தெரிவித்துள்ளார்.


