கனவாகவே போகும் மத்திய அமைச்சர் பதவி! ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் நிலவரம் என்ன?

 
ops

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

O Panneerselvam: OPS: கலங்கிப்போன ஓபிஎஸ்.. அடுத்தடுத்து சோக நிகழ்வுகள்;  பன்னீர் செல்வம் குடும்பத்தில் 6 மாதங்களில் 3 மரணம் | O. Panneerselvam's  wife passes away and a ...


பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அதிமுக தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறி வரும் ஓபிஎஸ் அதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சார்ந்த நவாஸ் கனி 27934 (+12322 )வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் 15612(-12322) வாக்குகளையும், அதிமுக 5611 (-22323) வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4961 ( - 22973) வாக்குகளையும் பெற்றுள்ளனர். 11 மணி நிலவரப்படி, ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.