அமைச்சரவை கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுவுக்கு என்ன வேலை?- டிஜிபியிடம் திமுக புகார்

 
x

அமைச்சரவை கூட்டங்களில் தனி நபர்கள் பங்கேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.


அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் தனி நபர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ஆகிய நபர்கள் சட்டவிரோதமாக பங்கேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். முதல்வர் அறையை ஒட்டி இருவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருவரும் அரசு ரகசியங்களை தெரிந்துகொள்வதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டிஜிபிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார். அவர்கள் அரசு ஊழியர்களா? அல்லது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பதவி வகிப்பவர்களா? என்றும் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி வருகிறார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி அரசு தகவல்களை கசியவிட்ட பொது ஊழியர்கள் மற்றும் முதலமைச்சர் பின்னணி குறித்து ஆய்வு செய்து கடுமையான குற்றவிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.