அண்ணாமலை மீது திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? திருமுருகன் காந்தி கேள்வி..!

 
1

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி  வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,


அண்ணாமலை மீதான திமுக   பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush  கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்  கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான  உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக  தோழர்கள் பலர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர்  ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்? 

இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அநீதியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள். 
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். 
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர். 

 அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும்  திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.