தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?

 
1

நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார நியுனர் ஆனந்த் சீனிவாசன் விளக்குகிறார். 

இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் ஒரே நாளில் தங்கம் விலை எகிறி உள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே அதிக தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அரசு கொடுத்த பெரிய பரிசாக அமைந்தாலும், ஒரு சிறிய மூக்குத்தி கூட வாங்க நினைக்கும் ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு பேரிடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது, அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்வியையே காட்டுகிறது என்று ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.தங்கம் இறக்குமதி செய்வதற்கு அதிகளவில் டாலர்களைச் செலவிட வேண்டியுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவதைத் தவிர்க்கவே இத்தகைய கோரிக்கையை அவர் வைக்கிறார்

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராகச் சரிந்து வருவதால் மக்கள் தங்கள் சேமிப்பைத் தங்கமாக மாற்றி வருவதாகவும், இதைத் தடுத்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க முடியும் என அரசு நினைப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்

பிரதமர் மோடி ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என கூறியது, அரசாங்கத்தின் பொருளாதார தோல்வியை காட்டுகிறது. தங்கம் இறக்குமதி செய்ய டாலர்களை செலவிட வேண்டி உள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கைபிருப்பு குறைவதை தவிர்க்கவே இத்தகைய கோரிக்கைகளை அவர் வைக்கிறார். 

அதேபோல், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக சரிந்து வருகிறது. மக்கள் தங்கள் சேமிப்பை பணமாக வைத்திருப்பதை விட தங்கமாக மாற்றி வருகின்றனர். இதை தடுத்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பை தக்கவைக்க முடியும் என அரசு நினைக்கிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், தைரியமாக தங்கம் வாங்கலாம். அரசாங்கம் சொல்வதை கேட்டு தங்கம் வாங்குவதை நிறுத்தாதீர்கள். வங்கியில் உங்கள் பணத்தை வைத்தால் பணவீக்கத்திற்கு நிகரான வட்டி கிடைக்காது. ஆனால் தங்கம் என்பது உங்கள் கையில் இருக்கும் சொத்து. ரூபாயின் மதிப்பு இன்னும் குறையப்போகிறது. அப்படி இருக்கையில், தங்கம் விலை குறையும் என்று காத்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல என கூறினார். 

தங்கம் விலை வரும் காலங்களில் குறைய வாய்ப்பில்லை. அது தொர்ந்து ஏறுமுகத்திலேயேதான் இருக்கும் என கூறிய ஆனந்த் சீனிவாசன், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் 25,000 ரூபாய் வரை செல்லக்கூடும் என எச்சரித்தார். எனவே கையில் பணம் இருக்கும்போதே தங்கத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மேலும், நடுத்தர வர்க்க மக்கள் தங்கள் சேமிப்பை பாதுகாத்துக்கொள்ள தங்கமே சிறந்த வழி என அவர் கூறினார்.