ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

 

ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் வகுப்பு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன. அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் அடுத்து பள்ளி எப்போது திறக்கும் என்று காத்திருக்கின்றனர். ஆன்லைன் வகுப்பு போன்றவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி
தனியார் பள்ளிகள் மாணவர்கள் பற்றி கவலையின்றி கட்டணத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மத்திய அரசு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பான

ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? – உயர் நீதிமன்றம் கேள்விவழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகளுக்கு அரை மணி நேரம் வகுப்புகள் நடத்தலாம். ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. எந்த எந்த நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பது பற்றி அந்த அந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு தன்னுடைய விளக்கத்தை நீதிமன்றத்தில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.