இது என்ன நியாயம் : பாஜகவுக்கு ஒரு விதி, எங்களுக்கு ஒரு விதியா?
Apr 21, 2024, 16:02 IST1713695577539
தேர்தலில் வென்றால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்வோம் என பிரசாரங்களில் அமித்ஷா பேசி வருகிறார். மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா தேர்தல்களில் 'பஜ்ரங் பலி கி ஜெய்' எனச் சொல்லி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எங்கள் தேர்தல் பிரசார பாடலில் இருந்து 'இந்து', 'ஜெய் பவானி' ஆகிய வார்த்தைகளை நீக்கச் சொல்லி எங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான் தேர்தல் ஆணையத்திடம் கூறிக்கொள்ள விரும்புவது, அந்த வார்த்தைகளை நாங்கள் நீக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.