பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் பயணக்கட்டணம் எவ்வளவு?

 
Q

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல் அமைச்சர் விஜய் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தனர். போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதற்கான விழா நடைபெற்றது. பிரதமர் மோடியும் விஜய்யும் ஒன்றாக பச்சைக்கொடியை ஆட்டி மெட்ரோ ரயில் ரயில் சேவையை தொடங்கி வைத்ததோடு அதில் ஏறி பயணிக்கவும் செய்தனர். புதிய வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்களில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரயிலுக்கான கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ டூ பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்ல ரூ.10 கட்டணம் ஆகும். பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை செல்ல ரூ.40 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 கட்டணம்

பூந்தமல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ

கரையான்சாவடி மெட்ரோ

குமணன்சாவடி மெட்ரோ

காட்டுப்பாக்கம் மெட்ரோ

ரூ.30 கட்டணம்:

அய்யப்பன்தாங்கல் மெட்ரோ

தெள்ளியரகரம் மெட்ரோ

போரூர் புறவழிச்சாலை மெட்ரோ

போரூர் சந்திப்பு மெட்ரோ.