ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து? இந்திய விவசாயத்திற்கு சவால் விடும் வானிலை அறிக்கை..!!

 
Q

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிக்கை;

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் பருவமழையின் அளவு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையும்.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை (100) விட, 90 சதவீதமாக குறையும். இது கடந்த ஏப்ரல் மாதம் 92 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமான மழைப்பொழிவு இருக்கும்.ஆனால், மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யும். வடமேற்கு இந்தியாவில் 92 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் ஜூன் மாதம் வெப்பஅலை வீசும்.தற்போதைய கணிப்பின்படி, மழைப்பொழிவு இன்னும் குறைந்து கடுமையான வறட்சியாக மாறுவதற்கு 35% வாய்ப்புகள் உள்ளன.பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைகிறது. இந்த மாற்றம், இந்தியப் பருவமழையைப் பலவீனப்படுத்துகிறது.

இது இந்திய விவசாயத்திற்கு பெரும் சவாலாகும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.