கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் எது..??
Nov 24, 2026, 12:45 IST1795504536252
கார்த்திகை தீபத் திருநாள் நவம்பர் 24 (இன்று) கொண்டாடப்படுகிறது. வீடுகளில் விளக்கேற்ற மாலை 5.35 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் (அல்லது மாலை 6.00 மணிக்கு மேல், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு) ஏற்றுவது உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
இடம் மற்றும் விளக்குகளின் எண்ணிக்கை:
வீட்டு முற்றம் (முன்புறம்) – 4 விளக்குகள்
சமையல் அறை – 1 விளக்கு
நடையிடம் (Hallway/Passage) – 2 விளக்குகள்
வீட்டின் பின்புறம் – 4 விளக்குகள்
திண்ணை – 4 விளக்குகள்
மாடக்குழி – 2 விளக்குகள்
நிலைப்படி (வாசற்படி) – 2 விளக்குகள்
பூஜை அறை – 2 விளக்குகள்
வெளியே (யம தீபம்) – 1 விளக்கு
திருக்கோலம் இட்ட இடம் – 5

