விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்க - ஐகோர்ட்
விஜய் பயணம் செய்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியதற்கு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.. ?? புகார் இல்லையென்றாலும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அந்த பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன தடை, புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.
விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்க - சென்னை உயர்நீதிமன்றம்!
— Surya Born To Win (@Surya_BornToWin) October 3, 2025
"விஜய் பயணம் செய்த வாகனம் விபத்தை ஏற்படுத்தியதற்கு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை.. ?? புகார் இல்லையென்றாலும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்,..
பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?""
நேத்திமதி… pic.twitter.com/Qj770R8nbx
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் என சொல்லிவிட்டு, சென்னையிலிருந்து காலை 8.50 மணிக்குதான் விஜய் புறப்பட்டார். 11 நிபந்தனைகளில் இரு நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன, மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றார்.

