கள் விற்பனையை அனுமதித்தால் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி..!!

 
Q

கள் விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது என்று கேட்டுள்ளது. கள் விற்பனை அதிகரித்தால் அரசுக்கு வருமானமும் ஏற்படுமே என்று கேட்டுள்ளது. பிற மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் எண் அனுமதி வழங்கப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் 1987 ஜனவரி 1 முதல் கள் விற்பனைக்கு முழுத் தடை விதிக்கப்பட்டது. இது 1986-ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத் திருத்தத்தின் விளைவு. இந்தத் தடைக்கு பல காரணங்கள் இருந்தன.

முதலாவதாக, கள்ளச் சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த மதுபானங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள். இரண்டாவதாக, அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் TASMAC தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கம்.