இபிஎஸ் குறித்து நான் பேசியது 100% சரியானது .. என் கருத்து மாறாது - அண்ணாமலை
நான் விடிய விடிய படித்ததும், பால் கறந்ததும், மண்வெட்டி பிடித்து கை காப்பு காய்த்திருப்பதும் எனக்குத்தான் தெரியும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத உயர் படிப்புக்காக இன்று இரவு இங்கிலாந்து செல்கிறேன் அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன் ஆளும் கட்சிக்கு எதிரான சண்டை தொடரும் வெளிநாடு சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில் தான் இருக்கும். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன் எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ஸ்பெயினுக்கு சென்ற போது ஏற்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை. எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். அது 100% சரியானது. 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால் 70 வயது பழனிசாமி பேசியது மட்டும் சரியா ? நான் விடிய விடிய படித்தது, விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய என் அப்பாவுடன் சேந்து மண்வெட்டி புடிச்ச கை இன்னும் காப்பு காய்த்திருக்கு. என்னிடம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும்.
கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ், சாரி எனக்கூறி தவிர்க்க முடியும். ஆனால், அது மக்களை ஏமாற்றுகிற வேலை! உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கு, எனக்கு 3 வருட அனுபவம் தான் இருக்குனு சொல்றதுக்கு நான் வரல, அது உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி. என் பாணி மாறாது.
செப்டம்பர் 1 முதல் உறுப்பினர் சேர்க்கையை பாரதிய ஜனதா கட்சியை தீவிர படுத்த உள்ளது உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பாஜக பயணம் மேற்கொள்கின்றது பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணையலாம்.” என்று கூறினார்.