நடிகர் விஜய்க்கு எதிரான மனைவி சங்கீதா மனுவில் என்ன சொல்லி இருக்காங்க கவனிசீங்களா..?
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மனுவின் விவரங்கள், தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த மனுவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மிக முக்கியமான 6 தகவல்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.
உறவில் விரிசல்: கடந்த 2021-ம் ஆண்டு முதலே தங்களுக்குள் கசப்பான சம்பவங்கள் தொடங்கயதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாகவும், அது தனது நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தும், அதனை அவர் செயல்படுத்தவில்லை என்பதே சங்கீதாவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
மன உளைச்சல்: சம்பந்தப்பட்ட அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்ததாகவும், அதற்கு விஜய் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். இந்தச் செயல்கள் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் ஈடு செய்ய முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை: விஜய் தன்னை நடத்திய விதம் குறித்து உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ள சங்கீதா, சண்டைக்கான காரணங்கள் குறித்துப் பேச முற்பட்டபோது விஜய் அதனைத் தவிர்த்ததாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னைத் தனிமைப்படுத்தி வாழ வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், இது ஒரு கௌரவமான வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவனாம்சம் மற்றும் வசிப்பிடம்: தமக்கு விவாகரத்து வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள சங்கீதா, விஜய்யின் சமூக அந்தஸ்து மற்றும் வருமானத்திற்கு ஏற்ப கௌரவமான ஜீவனாம்சத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும், வழக்கு முடியும் வரை அல்லது தகுந்த மாற்று வசதி செய்து தரும் வரை, தற்போது வசித்து வரும் நீலாங்கரை வீட்டிலேயே தங்குவதற்கான உரிமையையும் அவர் கோரியுள்ளார்.
ரகசிய விசாரணை கோரிக்கை: குடும்ப கௌரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை ரகசியமாக (In-camera proceedings) நடத்த வேண்டும் என்று சங்கீதா வலியுறுத்தியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அந்த நடிகையை இந்த வழக்கில் இரண்டாம் எதிர்மனுதாரராக இணைத்துக் கொள்ளத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முடிவுக்கு வந்த சமரச முயற்சிகள்: கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை விஜய்யுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவுக்கு வரத் தான் முயற்சி செய்ததாகச் சங்கீதா கூறியுள்ளார். ஆனால், விஜய் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள முன்வராததால், வேறு வழியின்றித் தனது 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

