அம்மோனியா காற்றில் கலந்தால் என்னவாகும்..??
அம்மோனியா என்பது தூங்கும் சிங்கம் போன்றது. அமைதியாக இருக்கும் வரை அம்மோனியாவால் எந்த பாதிப்பும் இல்லை. வெடித்துச் சிதறி காற்றில் கலக்க ஆரம்பித்தால் பாதிப்பு அதிகம்.
அம்மோனியா வாயு என்பது நச்சுத்தன்மை மிக்கது. இது காற்றில் கலந்து அதை மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும், மயக்கம் ஏற்படும். ரொம்ப நேரம் சுவாசித்தால் நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி ஆக்சிஜன் இல்லாமல் செய்துவிடும். விவசாய உரத் தேவைகளுக்கு அம்மோனியா அவசியமாக திகழ்வதால் அதன் உற்பத்தி இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
அம்மோனியா காற்றில் கலந்தால் 4 முதல் 5 மணி நேரம் வரை அதன் தாக்கமும், நச்சுத் தன்மையும் இருக்கும். லேசான பாதிப்பு என்றால் மயக்கம் மட்டும் வரும். பாதிப்பு அதிகமிருந்தால் மூச்சுத்திணறலும் வரக் கூடும்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அங்கு திடீரென அமோனியா வாயு கசிந்துள்ளது. அப்போது பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வாயு கசிந்த காற்றை சுவாசித்து உள்ளனர்.
இதனால் முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலருக்கு வாய்,மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வழிய, பெரும் அச்சம் உண்டானது. மூச்சுவிட முடியாமல் திணறிய தொழிலாளர்களில் 7 பேர் பலியாகினர்.
பலர் மயக்கம் அடைந்தனர். தகவலறிந்த மருத்துவக்குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். மயக்கம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயு எப்படி கசிந்தது என்பது பற்றிய எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

