கோயில்களின் உபரி நிதி ரூ.20,000 கோடி என்ன ஆனது?- விசாரணையை தொடங்கிய தவெக அரசு

 
அ

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதி 20000 கோடி என்ன ஆனது? என்பதை தவெக அரசு விசாரிக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சாதி பார்த்து அமைச்சர் பதவி வாங்கினாரா? அமைச்சர் ரமேஷ் விளக்கம் -  தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். கோயில்களில் கிடைக்கும் உண்டியல், இதர சேவைகள் கிடைக்கும் வருமானம்,  சொத்துக்களின் வாடகை, குத்தகை மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கோயில்களின் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . கடந்த ஆட்சியிலும் கோயில்களின் உபநிதியை கொண்டு வணிக வளாகம்,  திருமண மண்டபம், கார்பார்க்கிங், அன்னதான கூடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கோயில் உபநிதியில் இருந்து 20 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று வரை பல கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை. சுகாதார வளாகம், குடிநீர் வசதி உட்பட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஆனால் இது போன்ற அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்யாமல் தேவையில்லாமல் கட்டுமான பணிகளுக்கு பல்லாயிரம் கோடி வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.  இதில் பல கோயில்களில் வருமானம் இல்லாமல் கட்டுமான பணி பகுதி பகுதியாக நடந்து வருகிறது.

இப்படி கோயில்களின் நிதி தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் நடத்திய ஆய்வின் மூலம் கோயில்களின் நிதி பல ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விரிவான விசாரணை நடக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்குப் பிறகு கோயில்களின் விதிகள் எந்த அளவுக்கு வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் முறைகேடு எதுவும் நடந்ததா, கூடுதலாக கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து விரைவாக பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து கோயில் நிதிகள் முறைகேடுகளாக செலவு செய்யபட்டு வருவது தெரிய வந்தால் விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது